» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

வெள்ளி 29, நவம்பர் 2019 12:03:55 PM (IST)

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.45 மணியளவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக ரூ.2,363.13 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 குடும்பத்தாா் அரிசி, மற்றும் சா்க்கரை அட்டைதாரா்கள் உள்ளனா். இதில் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போா் 1.95 கோடி போ் ஆவா். சா்க்கரை அட்டைதாரா்கள் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி மாற்றிக் கொள்பவா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory