» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

வெள்ளி 29, நவம்பர் 2019 10:03:07 AM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று மருத்துவமனையின் கலையரங்கத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் அரவணைப்பில் அமைந்துள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மேல்மருவத்தூரில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் அனைத்து விதமான சிகிச்சைகளும் சிறப்பு வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று மருத்துவமனையின் கலையரங்கத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு மருத்துவமனையின் துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் தலைமை வகித்தார். மருத்துவ இயக்குனர் டாக்டர் த.ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆதிபராசக்தி குழும பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் மருத்துவமனை செவிலியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் பணியாற்றி கொண்டிருக்கும் ஊழியர்களுடன் மருத்துவமனையின் துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் கேக் வெட்டி அவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அதன் பின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ், சிறப்பு விருந்தினர் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோரின் சிறப்புரையும், துணை தலைவர்  லக்ஷ்மி பங்காரு அடிகளார் தலைமையுரையும் ஆற்றினார்.இவ்விழாவின் மருத்துவமனையின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஒலி ஒளி விளக்கப்படம் திரையிடப்பட்டது. மேலும் மருத்துவமனைக்காக வலைதளமும் தொடங்கி வைக்கப்பட்டது. புதிய தலைமை நிர்வாக இயக்குனர் சேகர்-ஐ டாக்டர் ரமேஷ்  அறிமுகபடுத்தினார். மருத்துவமனையின் செயல் திட்டமும், தொலைநோக்கு பார்வையும் குறித்த வரையறைகளும் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை மனிதவள அதிகாரி ஸ்ரீநிவாசன், முதன்மை வளாக மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அதிகாரி சந்திரசேகர் குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory