» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மோசமான சாலைக்கு ஏன் 50% சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது? உயர் நீதிமன்றத்தின் கேள்வி

வியாழன் 28, நவம்பர் 2019 4:55:53 PM (IST)

சென்னை மதுரவாயல் - வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஏன் 50 சதவீத மட்டும் சுங்கக் கட்டணம்  வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக, அதில் பயணம் செய்த பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.இதையடுத்து இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

அதன்படி அவ்வழக்கில் மத்திய சாலை போக்குவரத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை ஆகியாரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை இடையிலான சாலையை முறையாக தரமானதாக அமைக்கும் வரை, ஏன் 50 சதவீத சுங்கக்கட்டணத்தை மட்டும் வசூலிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory