» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ரஜினிகாந்த் நிச்சயம் மாற்றத்தை தருவார் : அர்ஜூன் சம்பத் நம்பிக்கை

வியாழன் 28, நவம்பர் 2019 4:04:49 PM (IST)

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு தனிக்கட்சி தொடங்கி தமிழகத்தில் நிச்சயம் மாற்றத்தை தருவார் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் வைத்து இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் வணங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்மீக அரசியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தோம். அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்குவது உறுதி. 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ரஜினிகாந்த் தனித்தே போட்டியிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவார். 

அவரது அரசியல் மக்கள் நலன் காக்கும் அரசியலாக இருக்கும். வருகிற தேர்தலில் ரஜினி நிச்சயம் மாற்றத்தை தருவார். ராயப்பேட்டையில் நடக்கும் இந்து மக்கள் கட்சி அரசியல் மாநாட்டையொட்டி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து டிசம்பர் 1-ந்தேதி காலை 11 மணிக்கு காவி கொடி பேரணி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் ஆன்மீக அரசியலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.


மக்கள் கருத்து

NARTHANov 29, 2019 - 03:02:18 PM | Posted IP 108.1*****

மிக மிக சரியான கருத்து பதிவிட்ட பூபதிக்கு மிக்கநன்றி

மதன்Nov 29, 2019 - 11:58:46 AM | Posted IP 108.1*****

இந்த சொம்பத் ஒரு முட்டா பய, குடும்பத்து ஒருவர் உடல்நிலை சரியில்லாத பொது வெளிநாட்டு பிற மத்தினர் ஆஸ்பத்திரியில் சிகிக்சை அளிக்கும்போது, பிற மத்தினர் மேல தேவையில்லாமல் வெளிநாட்டு கைக்கூலி என்று கூவுவது மனநோயாளி சைக்கோ (வைகோ) மாதிரி இனொரு மத வியாபாரி ..

ராமநாதபூபதிNov 28, 2019 - 04:30:56 PM | Posted IP 162.1*****

இது போன்ற லூசுகளை அரசே ஒரு முடிவு செய்து ஏற்று நடத்தவேண்டும். அரசு கண்காணிப்பில் வைத்து நல்ல தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory