» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

வியாழன் 28, நவம்பர் 2019 12:45:18 PM (IST)

கனமழை எதிரொலியாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை  மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

விடிய விடிய மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.கனமழை காரணமாக சென்னை பல்கலை.கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார். வேலூர், காஞ்சிபுரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சென்னை பல்கலை. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory