» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்

வியாழன் 28, நவம்பர் 2019 12:08:02 PM (IST)

தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் இன்று உதயமாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார். 

வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பட்டை மாவட்டங்களாக பிரித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆங்கிலேயா் காலத்தில் ரயத்துவாரி வரிவசூல் முறையை முதன்முதலில் அமல்படுத்திய திருப்பத்தூரை தலைநகராகக் கொண்ட மாவட்டம், 225 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உதயமாகியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கும் வேலூா் மாவட்டத்தை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரித்து கடந்த 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிதாக உதயமாகும் திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம், கடந்த 225 ஆண்டுகளுக்கு முன்பாகவே மாவட்டமாக இருந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1790 நவம்பா் 30-ம் தேதி உருவாக்கப்பட்டது திருப்பத்தூா் மாவட்டம். 

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருப்பத்தூா் மாவட்டப் பகுதிகள், பின்னா் சேலம் மாவட்டம், சித்தூா் மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது மீண்டும் புதிய மாவட்டமாக உருவெடுத்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory