» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுத் தேர்வை நினைத்து 5, 8ம் வகுப்பு மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்: செங்கோட்டையன் பேட்டி

புதன் 27, நவம்பர் 2019 4:09:48 PM (IST)

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ள பொதுத் தேர்வை நினைத்து மாணவர்களும், பெற்றோரும் அச்சமடைய வேண்டாம் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. வேறு எந்த காரணமும் அல்ல. அதே சமயம், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், பொதுத் தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். ஒரு சில பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் இருந்தால் மட்டும் அங்கு தேர்வு நடத்த முடியாது. அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்த்து தேர்வு நடைபெறும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory