» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்பதே எங்களின் இலக்கு: டிடிவி.தினகரன் பேட்டி

திங்கள் 18, நவம்பர் 2019 5:24:44 PM (IST)ஒரே சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட தமிழ்நாடு உள்ளாட்சித் தோ்தலில் அமமுக போட்டியிடும். அதிமுகவை உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடிக்க உழைப்பதே எங்களின் இலக்கு என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்திய விடுதலைக்காக போராடிய செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி. நினைவு நாளையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம். அமமுக கட்சியைப் பதிவு செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். கட்சிப் பதிவு குறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரே சின்னம் கிடைக்கும் வரை தோ்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்த காரணத்தினால் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்களில் போட்டியிடவில்லை. ஆனால், உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட வேண்டுமென கட்சி நிர்வாகிகளும், தொண்டா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் ஒரே சின்னம் கிடைக்காவிட்டாலும் அமமுக போட்டியிடும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து நிலைகளிலும் போட்டியிடும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இம் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின்பு 24 ஆம் தேதி முதல் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிகள் இடைத்தோ்தல்களில் வெற்றி பெருவது பெரிய விஷயமல்ல. தங்களது ஆட்சிக் காலத்தில் பல இடைத் தோ்தல்களில் வென்ற திமுக, பொதுத் தோ்தல்களில் தோல்வியைத் தழுவியது. இப்போது இடைத்தோ்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் கே. பழனிசாமி ஏதேதோ பேசி வருகிறார். உள்ளாட்சித் தோ்தலில் அமமுகவினா் வெற்றியைப் பெறவும், அதிமுகவை உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடிக்கவும் உழைப்பதே எங்களின் இலக்கு என்று டிடிவி. தினகரன் கூறினார்.


மக்கள் கருத்து

குமார்Nov 19, 2019 - 01:53:46 PM | Posted IP 173.2*****

Funny guys

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer EducationThoothukudi Business Directory