» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்கள் சபரி மலை செல்லத் துடிப்பது ஏன்? கஸ்தூரி கேள்வி

திங்கள் 18, நவம்பர் 2019 4:12:31 PM (IST)

புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு? என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். 

சபரி மலை பிரச்சினை குறித்து விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. நடிகை கஸ்தூரியும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- "குழந்தையின் கிறுக்கல் களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலை நயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை. கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்டு நாத்திக சீன அதிபருக்குகூட ரசிக்க தெரிந்தது.

இங்கு வன்மம் பிடித்த சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை. சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம்பிடிக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால்... தீவிர பக்தைகளா என்றால் அதுதான் இல்லை. பயங்கரவாதிகள், பகுத்தறிவுவாதிகள். பெண் உரிமை பெரும் போராளிகள். சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை. பாவம். அய்யப்பன்தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார். புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு? சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்பட வேண்டும். அது அவரின் பிறப்பினால் அல்ல. அவரின் குணத்தினால்.” இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Nov 19, 2019 - 01:36:52 PM | Posted IP 173.2*****

நல்ல சிந்தனை .

maniNov 19, 2019 - 01:12:27 AM | Posted IP 162.1*****

நியாயம் தான். ..... தேர்தலுக்கு முன் கோயிலுக்கு சென்று விட்டு, ஜெயித்த பின் இந்துக்கள் மனத்தை புண் படுத்தும் சில ***** பற்றி கூறியுள்ளார்.

என் பெயர் தமிழ்Nov 18, 2019 - 05:33:30 PM | Posted IP 173.2*****

ரொம்ப நியாயமா பேசுறோம்னு நெனப்பு..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer EducationBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory