» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை டிச.2ல் வெளியாகும்: தேர்தல் ஆணையம் தகவல்

திங்கள் 18, நவம்பர் 2019 3:49:09 PM (IST)

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை  டிச.2ல் வெளியாகும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான  வழக்கில்  உள்ளாட்சித் தேர்தல் விவரங்களை டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory