» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு : 3 பேராசிரியர்களுக்கு சம்மன்

திங்கள் 18, நவம்பர் 2019 3:41:29 PM (IST)

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஐஐடி கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்தது. அதன்படி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications




Black Forest Cakes




Thoothukudi Business Directory