» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் பாஜக இழப்பீடு வழங்க தயார்: பொன்.ராதாகிருஷ்ணன்

திங்கள் 18, நவம்பர் 2019 12:40:48 PM (IST)

முரசொலி நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க பாஜக தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. அறக்கட்டளைக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் எனக் கூறப்படுகிறது. அதற்கான மூலப்பத்திரம் உள்ளது என தி.மு.க. வெளியிட்டுள்ளது. முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமா, இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு தயவு செய்து தனது பதிலை தெரிவிக்க வேண்டும்.

தலித் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும். அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் ரூ.5 கோடி மதிப்பு எனவும், அந்த நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் தி.மு.க.விற்கு ரூ.5 கோடி இழப்பு என்றால் அந்த பணத்தை நான் அல்லது பா.ஜ.க. தர தயார். அந்த பஞ்சமி நிலத்திலிருந்து தி.மு.க. அறக்கட்டளை அகற்றப்பட வேண்டும்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்வு நடந்து வருகிறது. தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள பா.ஜ.க. தயார் நிலையில் உள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.க.வுக்கு வசந்த கால தேர்தலாக இருக்கும். அதிக இடங்களில் வெற்றி பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றியை பெற வேண்டும் எனும் நோக்கில் தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை இன்னும் கூட்டணி முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். அதிக இடங்களில் போட்டியிடுவோம். தூய்மையான ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க நடவடிக்கை எடுப்போம். உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறவில்லையெனில் கிராமப்புற மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ, அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவோ முடியாத நாதியற்ற நிலை ஏற்படும்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செல்வாக்கு செல்லுபடியாகாது. தனி நபரின் செல்வாக்குதான் உள்ளாட்சி தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும். கோடிக்கணக்கான நிதியை மத்திய அரசு தர தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் நிதி பெற்று மக்களின் தேவைகளை நிறைவேற்றமுடியும். தூய்மையான, நேர்மையான மக்கள் பிரதிநிதிகள் வரவேண்டும் எனும் ஏக்கம் மக்களிடம் உள்ளது. அதை கொடுக்கும் சக்தி படைத்த ஒரே கட்சி பா.ஜ.க.தான். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிNov 19, 2019 - 10:16:57 AM | Posted IP 108.1*****

அட கூறு கேட்ட குக்கரு. மாநில ஆட்சி உங்க கிட்டே தானே இருக்கு பதிவுத்துறை உங்க கிட்டத்தானே இருக்கு. நீங்களா ஆதாரத்தை வெளியிட்டு இந்த பிரச்சனையை முடித்துவிடலாமே. அதை விடுத்து திமுகவினரை நோண்டி கிட்டே இருப்பது எந்த விதத்தில் நியாயம் பொரியாரே

தமிழ்ச்செல்வன்Nov 18, 2019 - 05:51:20 PM | Posted IP 162.1*****

ரெண்டு பெரும் கூட்ட கள்ளங்கதானே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory