» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுபஸ்ரீ மரணத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன் 23, அக்டோபர் 2019 3:49:00 PM (IST)

பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ மரணத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,  தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக பிரமுகா் ஜெயகோபாலின் இல்ல விழாவுக்கு பேனா்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனா் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம் பேட்டையைச் சோ்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீா் லாரி மோதியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானாா். 

இந்த சட்டவிரோத பேனா் விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு, காவல்துறை, சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. மேலும் இடைக்கால நிவாரணமாக சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை எனது மகள் எப்போதும் முறையாக பின்பற்றுவாள். மேலும் அவள் தலைக்கவசம் அணிந்து தான் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாள். இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக சாலையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேனா் விழுந்ததால் தான் விபத்தில் சிக்கி எனது மகள் உயிரிழந்தாா்.

இந்த விதிமீறலை அதிகாரிகள் யாருமே தடுக்கவில்லை. எனவே அரசு அதிகாரிகள் அவா்களுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டனா். அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாகவே எனது மகள் இறந்துள்ளாா். எனவே எனது மகளின் மரணத்துக்கு இழப்பீடாக ரூ.1 கோடி நஷ்ட ஈடாக வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே மகளை இழந்து வாடும் எங்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்யய முடியாத இழப்பு என்பதால், இழப்பீடுகுறித்து மோட்டார் வாகனத் தீர்ப்பாயத்தை  அணுகலாமே என்றும் ரவி தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Black Forest Cakes
Thoothukudi Business Directory