» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் : 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

புதன் 23, அக்டோபர் 2019 3:46:31 PM (IST)

2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 2020-ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசால் அறிவிக்கப்படுகிறது. நாள், பொது விடுமுறைக்கான காரணம், கிழமை விவரம் வருமாறு:-

ஜனவரி 1-ந்தேதி - ஆங்கிலப் புத்தாண்டு - புதன்கிழமை

ஜனவரி 15-ந்தேதி - பொங்கல் - புதன்கிழமை

ஜனவரி 16-ந்தேதி - திருவள்ளுவர் தினம் - வியாழக்கிழமை

ஜனவரி 17-ந்தேதி - உழவர் திருநாள் - வெள்ளிக்கிழமை

ஜனவரி 26-ந்தேதி - குடியரசு தினம் - ஞாயிற்றுக்கிழமை

மார்ச் 25-ந்தேதி - தெலுங்கு வருடப்பிறப்பு - புதன்கிழமை

ஏப்ரல் 1-ந்தேதி - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - புதன்கிழமை

ஏப்ரல் 6-ந்தேதி - மகாவீர் ஜெயந்தி - திங்கட்கிழமை

ஏப்ரல் 10-ந்தேதி - புனித வெள்ளி - வெள்ளிக்கிழமை

ஏப்ரல் 14-ந்தேதி - தமிழ்ப் புத்தாண்டு - செவ்வாய்க்கிழமை

மே 1-ந்தேதி - மே தினம் - வெள்ளிக்கிழமை

மே 25-ந்தேதி - ரம்ஜான் - திங்கட்கிழமை

ஆகஸ்டு 1-ந்தேதி - பக்ரீத் - சனிக்கிழமை

ஆகஸ்டு 11-ந்தேதி - கிருஷ்ண ஜெயந்தி - செவ்வாய்க்கிழமை

ஆகஸ்டு 15-ந்தேதி - சுதந்திர தினம் - சனிக்கிழமை

ஆகஸ்டு 22-ந்தேதி - விநாயகர் சதுர்த்தி - சனிக்கிழமை

ஆகஸ்டு 30-ந்தேதி - மொகரம் - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 2-ந்தேதி - காந்தி ஜெயந்தி - வெள்ளிக்கிழமை

அக்டோபர் 25-ந்தேதி - ஆயுதபூஜை - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 26-ந்தேதி - விஜயதசமி - திங்கட்கிழமை

அக்டோபர் 30-ந்தேதி - மிலாது நபி - வெள்ளிக்கிழமை

நவம்பர் 14-ந்தேதி - தீபாவளி - சனிக்கிழமை

டிசம்பர் 25-ந்தேதி - கிறிஸ்துமஸ் - வெள்ளிக்கிழமை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory