» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளம் : சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவு

புதன் 23, அக்டோபர் 2019 12:34:16 PM (IST)



குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக விழுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவியில் சில தினங்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. இதனால்  குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர் . 

தொடர்ந்து இரண்டு நாளாக வெள்ளமாக இருந்த நிலையில் மழை குறைந்ததால் இரண்டு நாள் தடைக்கு பின் நேற்று காலை முதல் குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. வேலை தினமான இன்று குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது .சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory