» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கி கணக்கை ஹேக் செய்து மூன்றரை லட்சம் திருட்டு : குமரி இன்ஜினியருக்கு நிகழ்ந்த சோகம்

புதன் 23, அக்டோபர் 2019 11:23:41 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் பிரபின் ஃபெலிக்ஸ் ராஜன் என்பவரது வங்கி கணக்கை ஹேக் செய்து ரூ. 3.74 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள எண்ணெய் நிறுவத்தில் பணியாற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர்  பிரபின், கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி ஒரு மாத விடுப்பில் சொந்த ஊர் வந்துள்ளார். அவர் ஊர் திரும்பும் போது அவருக்கு சொந்தமான திருவிதாங்கோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கில் ரூ. 4,72,676 இருந்ததாம்.இந்நிலையில், மார்ச் 10-ம் தேதி பணம் எடுக்க ஏடிஎம் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மார்ச் 8-ஆம் தேதி ரூ. 97,407 மற்றும் 9-ம் தேதி ரூ. 95,933 இணைய வழி வங்கி சேவை மூலம் மாற்றப்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திடம் பிரபின் புகார் அளித்தார். மேலும் 10-ஆம் தேதி திருவிதாங்கோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்குச் சென்றபோது, வங்கி கணக்கிலிருந்து ரூ.85,273 பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் புகார் அளித்தும், வங்கி அலுவலர்கள் முறையாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், விடுப்பு முடிந்ததும் நைஜீரியா திரும்பிய பிரபின் வங்கிக் கணக்கில் இருந்து கடந்த மாதம் 11-ஆம் தேதி மீண்டும் ரூ. 95,933 இணைய வழி சேவை மூலம் திருடிப்பட்டிருந்தது. இதையடுத்து பிரபின் மனைவி சந்தூரி ரெஜிலா லெட் மீண்டும் வங்கி கிளையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து 20-ம் தேதி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணம் தொடர்ந்து திருடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து

இவன்Oct 23, 2019 - 01:18:48 PM | Posted IP 173.2*****

SBI வங்கியில் சில திருட்டு வடை நாட்டுக்காரன் (இந்திக்காரன்) தான் ஹேக் பண்ணியிருப்பான் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesThoothukudi Business Directory