» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுத் தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

செவ்வாய் 22, அக்டோபர் 2019 8:28:28 PM (IST)

பத்து , பதினொன்று மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்டையில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், பழையபடி தேர்வுநேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Anbu Communications



Thoothukudi Business Directory