» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளவட்டக் கல்லை எளிதாக தூக்கிய 54 வயது இளைஞர் : குவிகிறது பாராட்டு

செவ்வாய் 22, அக்டோபர் 2019 6:40:24 PM (IST)

சுசீந்திரத்தைச் சேர்ந்த 54 வயதுள்ள கோயில் பணியாளர் முருகன் என்பவர் சுமார் 100 கிலோ எடையுள்ள இளவட்டக் கல்லை சாதாரணமாகத் தூக்கி தோளில் வைத்தபடி கோயிலைச் சுற்றிவந்து வியக்க வைத்திருக்கிறார்.

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஊழியராக இருக்கிறார் முருகன். திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் கோயில் சுவாமி விக்கிரஹங்களை சுமந்து சென்றார் முருகன். பூஜை முடித்து சுவாமி விக்ரஹங்களுடன் திரும்பி வந்தபோது குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் இளைப்பாறினர்.அப்போது அங்கு கிடந்த 100 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி தனது தோளில் வைத்தபடி விநாயகர் சந்நிதியைச் சுற்றிவந்தார். பின்னர், மாப்பிள்ளைக் கல்லை கழுத்தைச் சுற்றி சாதாரணமாகத் தூக்கி கீழே தூக்கிப்போட்டார்.

சுமார் 100 கிலோ எடை கொண்ட அந்தக் கல்லை முருகன் தூக்குவதை அவருடன் சென்ற சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினர். வாலிபர்கள் தூக்கவே மிகவும் சிரமப்படும் இளவட்டக் கல்லை சாதாரணமாகத் தூக்கி சுற்றிய முருகனுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications



Thoothukudi Business Directory