» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்ணை இரவில் கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை : ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஞாயிறு 20, அக்டோபர் 2019 9:55:57 AM (IST)

பெண்ணை இரவில் கைது செய்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை சிவானந்தா சாலையை சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் சரவணன், ஒர்க்‌ஷாப் ரோடு பகுதியில் டயர் விற்பனை கடை நடத்தி வந்தார். அதற்கு எதிரில் மதுபாண்டியன் என்பவர் டயர் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அவர் தனது ஆட்களை வைத்து மிரட்டி எனது கணவரிடம் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார். இது குறித்து என் கணவர் திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் பிறகு எங்கள் கடைக்கு சென்ற போது வந்த என்னை மது பாண்டியன் செல்போனில் படம் பிடித்ததுடன், அதை ‘மார்பிங்’ செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு அசிங்கபடுத்துவதாக கூறினார். இது குறித்த எனது புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவரிடம் இருந்து 3 வீடியோக்களை பறிமுதல் செய்து, எனது புகாரை மதுரை மாநகர அனைத்து மகளிர் போலீசுக்கு (தெற்கு) மாற்றினர். அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், போலீசார் ஒருதலைபட்சமாகவே செயல்பட்டனர்.

புகாரை திரும்ப பெறுமாறு என் கணவரை வற்புறுத்தினர். ஆனால் நாங்கள் வாபஸ் பெற வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் மது பாண்டியனிடம் புகார் பெற்று, என் மீது வழக்குப்பதிவு செய்தனர். 14.1.2019 அன்று எனது கணவரின் கடைக்கு சென்றபோது, இரவு 8 மணி அளவில் போலீசார் என்னை கைது செய்தனர். 2 நாள் சட்ட விரோத காவலில் வைத்திருந்து, பின்னர் இரவு 7 மணிக்கு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர்.

பெண்களை மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை கைது செய்யக்கூடாது என்ற விதியை மீறி என்னை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பான செயல். எனவே என்னை கைது செய்த மகளிர் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், சம்பந்தப்பட்ட போலீசார் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory