» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியாக இருக்கும் மூதாட்டிக்கு ஆதரவுக்கரம் : மகனின் கோரிக்கையை நிறைவேற்றிய போலீசார்

சனி 19, அக்டோபர் 2019 8:00:11 PM (IST)திருநெல்வேலியிலிருக்கும் தனது தாயின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய மகனின் கோரிக்கையை நெல்லை மாநகர போலீசார் நிறைவேற்றியுள்ளனர். 

இது குறித்து நெல்லை மாநகர காவல் துணைஆணையர் அர்ஜுன் சரவணன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது,கடந்த 17-10-2019 அன்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து அழைத்த நெல்லையை சார்ந்த அமல்ராஜ் வேலு,அவரது தாயார் ஆறுமுகம்மாள் (80)  திருநெல்வேலியில் தனியாக வசிப்பதாகவும், அவ்வப்போது ஏதேனும் சிறுசிறு பிரட்சனைகள் ஏற்படுவதால் அவரது் தாயாரின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உதவ முடியுமா எனக் கோரினார் . 

அதன்படி 18ம் தேதி அவரது தாயாரை நேரில் சந்தித்த பெருமாள்புரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நெல்லை மாநகரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேர்களைத் தேடி என்ற மூத்தகுடி மக்கள் பாதுகாப்பு திட்ட பட்டா புத்தகத்தை வழங்கி, காவல்நிலைய தொடர்பு எண் , காவல் கட்டுப்பாடு அறை எண் ஆகியவற்றையும் வழங்கி என்ன உதவியென்றாலும் அழைக்க கூறினர். 

நெல்லை மாநகர காவல்துறையின் நடவடிக்கையை அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகனிடம் கூறியபோது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து மாநகர காவல்துறைக்கு பாராட்டுதலைப் தெரிவித்தார் . துரிதமாக செயல்பட்ட மாநகர காவலர்களுக்கு அது உரித்தாகட்டும் . இவ்வாறு தனது பேஸ்புக் பதிவில் நெல்லை மாநகர காவல் துணைஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ஒருவன்Oct 22, 2019 - 11:14:02 AM | Posted IP 162.1*****

சரி.. காவல்துறையினருக்கு பாராட்டுகிறேன் ... அமெரிக்கா வில் வசிக்கும் மகன் ஒரு முட்டாள்... தாயை விட பணமா முக்கியம் ??? தாயை தனியாக விட்டு விடலாமா ??? கூட இருக்க ஏன் முடியவில்லை ???

ulagamOct 21, 2019 - 10:40:41 AM | Posted IP 173.2*****

thamil nadu police na summaava. nanbenda

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes


Thoothukudi Business Directory