» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்கிரவாண்டி, நான்குனேரி,காமராஜ் நகர் இடைத்தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது

சனி 19, அக்டோபர் 2019 7:12:24 PM (IST)

விக்கிரவாண்டி, நான்குனேரி, காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது 

தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரியில் காலியாகவுள்ள காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளுக்கு 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்பாளர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்குகள் சேகரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் இன்று இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, மாலை 6 மணிக்கு 3 தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. தொடர்ந்து, வெளியூர் ஆட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam


CSC Computer Education




Thoothukudi Business Directory