» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இனி கட்டணம்

சனி 19, அக்டோபர் 2019 5:43:00 PM (IST)

மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.40 கட்டண வரம்பில் புதிதாக வெண்ணெய் உருண்டை பாறையும் வந்ததால் இலவசமாக இனி இதனை பார்வையிட முடியாது.  

வெண்ணெய் உருண்டை பாறையை வெளிநாட்டவர் பார்வையிட ரூ.600 கட்டணம் வசூலிக்கிறது என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்த நிலையில் கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறை அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

அருண்Oct 21, 2019 - 10:07:11 AM | Posted IP 106.1*****

அரசு தான் முதல் திருடன்.

யாரோ முகநூலில்Oct 19, 2019 - 05:50:28 PM | Posted IP 162.1*****

ஆமை புகுந்த வீடும் , மோடி புகுந்த இடமும் விளங்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory