» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் : மோடி தமிழில் டிவீட்

சனி 12, அக்டோபர் 2019 4:39:04 PM (IST)ஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா - சீனா இடையே அலுவல்சாரா உச்சி மாநாடு சிறப்பாக நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அவருக்கு தமிழக அரசு சார்பில் மிகச் சிறப்பான வழியனுப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என பலரும், பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் சொல்லி வழியனுப்பி வத்தனர். 

முன்னதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் கூறியிருப்பதாவது, மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி. தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும். நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும் என்று தமிழில் டிவீட் செய்துள்ளார். அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் மோடி கூறினார்.


மக்கள் கருத்து

அருண்Oct 13, 2019 - 05:06:11 PM | Posted IP 117.2*****

ட்விட்டர் ட்ரெண்டிங் பாத்து மிரண்டு போன மாதிரில தெரிது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory