» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீனா - தமிழகம் இடையே ஆழமான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகள்: பிரதமர் மோடி பேச்சு

சனி 12, அக்டோபர் 2019 12:56:04 PM (IST)சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே ஆழமான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன என கோவளத்தில் இந்தியா - சீன அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்தையின்போது பிரதமர் மோடி பேசினார்.

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி. பேட்டரி கார் மூலம், ஓட்டல் வளாகத்தை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, கடற்கரை கண்ணாடி அருகே, இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையை தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் கூறினார். தொடர்ந்து அவர் பேசும் போது, சீனாவுக்கும் தமிழக மாநிலத்துக்கும் இடையே ஆழமான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன. கடந்த 2000 ஆண்டுகளில், இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன.

கடந்த ஆண்டு வுஹானில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முதல் முறைசாரா உச்சிமாநாடு எங்கள் உறவுகளில் புதிய ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்தது, மேலும் புதிய வேகத்தை அளித்தது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய தகவல் தொடர்புகளும் அதிகரித்துள்ளன. வுஹான் உச்சி மாநாடு எங்கள் உறவுகளில் ஒரு புதிய வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது, இன்றைய சென்னை சந்திப்பு இந்தியா-சீனா உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும் என கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும் போது,  நீங்கள் கூறியது போல், நீங்களும் நானும் நண்பர்கள், இருதரப்பு உறவுகள் குறித்த இருதய கலந்துரையாடல்கள் போன்ற நேர்மையான உரையாடல்களில் ஈடுபட்டோம். உங்கள் விருந்தோம்பலால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறோம். நானும் எனது சகாக்களும் அதை மிகவும் வலுவாக உணர்ந்திருக்கிறோம். இது எனக்கும் எங்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory