» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க கூடாது - விக்கிரமராஜா

சனி 12, அக்டோபர் 2019 12:03:51 PM (IST)

சீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்திப்பது வரவேற்கத்தக்கது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். ஆனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்தியாவை வணிகத்தலமாக மாற்ற முயற்சித்தால் அதற்கு இடமளிக்க கூடாது.

ஏன் என்றால் சீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியாவை மாற்ற அந்த நாடு முயற்சிக்கும் இதற்கு ஒரு போதும் இடம் அளித்து விடக்கூடாது. சொத்து வரி உயர்வு, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகள் வாடகை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரை சந்தித்து பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பல கடைகள் காலியாகி வருகிறது. வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படடு வருகின்றனர். அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால் அதிகாரிகள் தடை செய்யாத பிளாஸ்டிக் பொருட்களையும் அள்ளிச் செல்கின்றனர். மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்குதலை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் வங்கிகள் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கிறது. வங்கி கணக்கில் பணம் இன்றி காசோலை திரும்பினால் ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். இது போன்ற நடைமுறையால் மத்திய அரசின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை திட்டம் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory