» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளிகளுக்கு மூன்று நாள் தீபாவளி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு

புதன் 9, அக்டோபர் 2019 7:18:21 PM (IST)

தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 26ம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும்.அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், அக்டோபர் 28ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து

D.GopalakrishnanOct 9, 2019 - 09:30:51 PM | Posted IP 141.0*****

sethigal is good ,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory