» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்: லதா ரஜினிகாந்த் கருத்து

புதன் 9, அக்டோபர் 2019 12:32:23 PM (IST)

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வரப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசும் கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது; 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் குறித்து கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும். தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Oct 10, 2019 - 09:09:50 AM | Posted IP 162.1*****

மாமா! பள்ளிக்கூட வாடகையை ஒழுங்கா மாதாமாதம் கொடுக்கச்சொல்லி கண்டிப்பான உத்தரவு போடணும்.

JeraldOct 9, 2019 - 12:52:08 PM | Posted IP 162.1*****

ஏன் வாடகை கேக்குறாங்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Anbu Communications



Thoothukudi Business Directory