» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என் பெயரை கெடுக்க அவதூறு பரப்பப்படுகிறது : நாஞ்சில் சம்பத் கண்டனம்

திங்கள் 30, செப்டம்பர் 2019 5:34:10 PM (IST)

சமூக வலைத்தளங்கள் மூலம் தன் பெயரை கெடுக்க வீடியோ மூலம் வதந்தி பரப்பி வருவதாக நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் மணலிக்கரையை அடுத்த மணக்காவிளையை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். அரசியல் பேச்சாளர். சமீபத்தில் வெளியான எல்கேஜி,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு ஆபாச படம் பரவியது. அதில் இளம்பெண்ணுடன், ஒருவர் மது அருந்தும் காட்சியும், அந்த பெண்ணை அந்த நபர் கட்டி அணைக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.இந்த காட்சிகளில் காணப்படும் நபர் நாஞ்சில் சம்பத் என்று செய்திகளும் பரப்பப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சிகள் பற்றி நாஞ்சில் சம்பத்திடம் இன்று கேட்ட போது, அவர் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சிகள் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர். அந்த காட்சிகளை நான் இதுவரை பார்க்கவில்லை. அரசியலில் நேர்மையும், தூய்மையும் கொண்டவன் நான். நான் அப்படிப்பட்டவன் இல்லை. புலி வேட்டைக்கு புறப்பட்ட நான் எலிகளை பொருட்படுத்துவதில்லை. யார் என்ன கூறினாலும், எனக்கு அதுபற்றி கவலையில்லை. யார் தூண்டுதலால், இதை யார் செய்தார்? என்பதை கண்டு பிடிக்கவும், நான் விரும்பவில்லை. என் பெயரை கெடுக்க யாரோ அவதூறு பரப்புகிறார்கள். எந்தவிதமான தவறுகளும் என் வாழ்க்கையில் இல்லை. என் பயணம் தொடரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory