» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை, அருவிகளில் வெள்ளம்: குளிக்கத் தடை

திங்கள் 30, செப்டம்பர் 2019 1:11:50 PM (IST)


குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலமான ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தேவையான மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது இதனால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது 

தொடர்ந்து பல நாட்கள் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் சீசன் நிறைவு பெற்று நிலையிலும்கூட குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக உள்ளது சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தாலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது  மேலும் குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று மாலை முதல் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இன்று காலையிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

நேற்று  இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை இன்று காலையில் மழையின் வேகம் சற்று குறைந்து உள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது இதே நிலை நீடித்தால் இன்று பிற்பகலில் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory