» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப்பேருந்து நடத்துநரை தாக்கிய ஆயுதப்படைக் காவலர்கள் : வேகமாக பரவும் வீடியோ

திங்கள் 30, செப்டம்பர் 2019 12:14:46 PM (IST)நாகர்கோவில் அரசுப் பேருந்தில் நடத்துனரை தாக்கிய நெல்லை ஆயுதப்படை காவலர்கள் கைது செய்யபட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்..

நாகர்கோவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த காவலர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோர் பயணித்துள்ளனர். பேருந்து நடத்துநர் ரமேஷ், அவர்கள் இருவரையும் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் வகையில் தங்களிடம் வாரண்ட் இருப்பதாக கூறிய காவலர்கள் இருவரும் பயணச்சீட்டு எடுக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில், வாரண்ட்டை காண்பிக்குமாறு நடத்துநர் ரமேஷ் காவலர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் வாரண்ட்டை காட்ட மறுத்த காவலர்கள் இருவரும், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது காவலர் நடத்துனர் ரமேஷ் கன்னத்தில் அறைந்துள்ளார். நடத்துனர் ரமேஷை நெல்லை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. 

இதனையடுத்து நடத்துனர் தாக்குதல் குறித்து மூன்றடைப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் மகேஷ், தமிழரசனை கைது செய்தனர். பின்னர் காவலர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நடத்துனர் ரமேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 


மக்கள் கருத்து

THAMILANOct 1, 2019 - 11:40:16 AM | Posted IP 162.1*****

இதுக்கு பிச்சை எடுக்கலாம்

அருண்Sep 30, 2019 - 08:55:34 PM | Posted IP 106.1*****

இவனுகளை டிஸ்மிஸ் பண்ணி விடணும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDAnbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory