» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பழமையான மொழி தமிழ் என பேச்சு

திங்கள் 30, செப்டம்பர் 2019 10:29:55 AM (IST)

மிக பழமையான மொழி தமிழ் என அமெரிக்காவில் நான் பேசினேன். இதன்காரணமாக தற்போது அங்குள்ள ஊடகங்களில் அதுதான் பேசப்படுகிறது  என பிரதமர் மோடி கூறினார்.

சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பிரதமர் மோடியும் உற்சாகமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக சென்னை வந்துள்ளேன். சென்னை மக்களை சந்தித்து பெருமகிழ்ச்சியளிக்கிறது. சென்னை ஐஐடி நிகழ்ச்சிக்காக வந்தள்ள எனக்கு நீங்கள் அளித்துள்ள சிறப்பான வரவேற்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

அமெரிக்காவில் மிக பழமையான மொழி தமிழ் என நான் பேசினேன். இதன்காரணமாக தற்போது அங்குள்ள ஊடகங்களில் அதுதான் பேசப்படுகிறது. மேலும் இந்தியாவின் மீது அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பயணத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். நாம் அனைவரும் நமது நாட்டின் நலனுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதே வேளையில் உலக நன்மைக்காகவும் நாம் பணியாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது. இது 130 கோடி மக்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பணியாகும்.

தற்போது மக்கள் ஆதரவுடன் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் முதலாவதாக ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள மாபெரும் பாதயாத்திரை மூலம் இதனை அனைத்து மக்களிடமும் நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDAnbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory