» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி விவசாயிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் : இன்ஜினியருக்கு 4 ஆண்டு சிறை

திங்கள் 30, செப்டம்பர் 2019 10:22:05 AM (IST)

தென்காசியில் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் பாலம் கட்ட தடையில்லா சான்று வழங்க ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளருக்கு  4 ஆண்டுகள். சிறைத்தண்டனை விதித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்  பொற்செழியன் இவர் தென்காசி பொதுப்பணித்துறை சிற்றாறு பாசன பிரிவில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டு தென்காசி மங்கம்மா மங்கம்மா சாலை பகுதியில் அண்டிதோடு பாக்டரி வைத்துள்ள  அமல்ராஜ் பாண்டியன் என்பவர் தனது விவசாய நிலத்தில்  பொதுப்பணித்துறை மூலம் ஒரு பாலம் கட்டி தரவேண்டும் என தென்காசி பொதுப்பணித்துறை சிற்றாறு பிரிவில் மனு கொடுத்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட பொதுப் பணித்துறை சிற்றாறு பாசன பிரிவு பொறியாளர் பொற்செழியன் மேற்படி  இடத்தில் பொதுப்பணித்துறை மூலம் பாலம் கட்டுவதற்கு போதுமான நிதி வசதி தற்போது இல்லை என்று தெரிவித்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள்  ஒன்று சேர்ந்து நிதி திரட்டி அந்த நிதி மூலம் பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் அந்த இடத்தில் பாலம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை சிற்றாற்றுப்பாசன பிரிவில்  தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

விவசாயிகளின் மனுவைப் பெற்றுக் கொண்ட   இளநிலை பொறியாளர் பொற்செழியன் அமல்ராஜ் பாண்டியன் என்பவரிடம் மேற்படி இடத்தில்  விவசாயிகள் சொந்த செலவில் பாலம் கட்ட தடையில்லா சான்று வழங்க வேண்டுமென்றால் தனக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி அமல்ராஜ் பாண்டியன் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார் அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி 2015ஆம் ஆண்டு மே 11-ம் தேதி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் 50 ஆயிரத்தை அமல்ராஜ் பாண்டியன் அன்றைய பொதுப்பணித்துறை சிற்றாறு பாசனப் பிரிவு இளநிலை பொறியாளர் பொற்செழியனிடம் வழங்கியுள்ளார். அதனை பெற்றுக்கொண்ட இளநிலை பொறியாளர் பொற்செழியன் அதனைத் தனது மேசையில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

அப்போது  அங்கு தயார்நிலையில் நின்று கொண்டிருந்த நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை  டிஎஸ்பி பற்குணம் மற்றும் போலீசார் இளநிலை பொறியாளர் பொற்செழியனை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் அவரிடம் இருந்து  50 ஆயிரம் ரூபாய் கரன்சி நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளர்  பொற்செழியனை  பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா முன்னாள்  சிற்றாறு பாசன இளநிலைப் பொறியாளர் பொற்செழியனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத  தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி  தனது தீர்ப்பில் கூறியுள்ளார் இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்.

அரசு அதிகாரி ஒருவர் விவசாயியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த சம்பவம் தென்காசி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory