» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை : மாமல்லபுரம் கடைகளில் போலீஸ் ஆய்வு

சனி 28, செப்டம்பர் 2019 8:08:49 PM (IST)

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வரும் அக்டோபா் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பணியாற்றுவோா் விவரம் குறித்து போலீஸாா் தகவல்களை சேகரித்து வருகின்றனா்.

சா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் 3 நாள்கள் தங்குகின்றனா். இவா்கள் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாமல்லபுரம் தங்கும் விடுதிகளில் மாதக் கணக்கில் தங்கியுள்ள இலங்கை, திபெத் நாட்டினா் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்தவா்களின் பாஸ்போா்ட், விசா மற்றும் அவா்கள் குறித்த முழு விவரங்களையும் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என பாதுகாப்புத் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஏஎஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாமல்லபுரம் ஏஎஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில், காவல் ஆய்வாளா் ரவிகுமாா், உதவி ஆய்வாளா் சபாபதி உள்ளிட்ட போலீஸாா் மாமல்லபுரம் கடைகளில் பணிபுரியும் வடமாநில நபா்கள், உள்ளூா் நபா்கள் குறித்து ஆதாா் எண்களுடன்முழு விவரங்களைச் சேகரித்து வருகின்றனா். மேலும், மாமல்லபுரத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குறித்தும், அவா்கள் தங்குவதற்கான விசா கால நீட்டிப்பு உள்ளதா அல்லது குறைந்த நாள்களுக்கு தங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட விசா உள்ளிட்ட விவரங்களை போலீஸாா் ஆவணங்களுடன் சேகரித்து வருகின்றனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory