» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுத்துறை பணியாளர்களுக்கு 10% பண்டிகைக் கால போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சனி 28, செப்டம்பர் 2019 11:20:55 AM (IST)

அரசு பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு 10 சதவீதம் பண்டிகைக் கால போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலாளர்  எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். 

இதன்படி, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் குரூப் "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் பண்டிகைக் கால போனஸாக அளிக்கப்படும். இந்தத் தொகை வரும் 30-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு அளிக்கப்படும். 

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், மின்சார வாரியப் பணியாளர்கள், ஆவின் நிறுவன ஊழியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர், பூம்புகார் கப்பல் கழகத்தினர், அரசு தேயிலை கழகத்தினர், அரசு ரப்பர் கழகத்தினர் ஆகியோர் போனஸ் பெறத் தகுதியானவர்கள். அவர்களுக்கான போனஸ் குறித்த உத்தரவுகள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து தனித்தனியாக வெளியிடப்படும் என்று தனது உத்தரவில் நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Anbu Communications



Thoothukudi Business Directory