» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்து உத்தரவு

வெள்ளி 27, செப்டம்பர் 2019 7:21:50 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை டிஎன்பிஎஸ்சி பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். இந்த நிலையில், குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அண்மையில் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து இந்தாண்டு நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு முறையில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Anbu Communications



Thoothukudi Business Directory