» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் ? : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி

புதன் 18, செப்டம்பர் 2019 1:44:00 PM (IST)

காங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள்? அந்த கட்சியின் ஆர்ப்பாட்டத்திலேயே 50 பேர் தான் உள்ளனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம்.காங்கிரசை கண்டு அ.தி.மு.க.வுக்கு எந்த பயமும் இல்லை. 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆர்ப்பாட்டத்திலேயே 50 பேர் தான் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள்? தோல்வியை கண்டு பயந்து ஓடியவர் ராகுல் காந்தி. அந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 18, 2019 - 02:47:20 PM | Posted IP 162.1*****

யாரும் இல்லை என்றால் ஏன் இவ்வளவு பெரிய விளக்கம்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest CakesCSC Computer EducationThoothukudi Business Directory