» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

புதன் 18, செப்டம்பர் 2019 12:28:50 PM (IST)

நீதிபதி தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு செல்ல மறுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி விலகல் கடிதம் அளித்தார். இதன்காரணமாக, அவரது அமர்வில் வழக்குகள் இதுவரை பட்டியலிடப்படவில்லை. தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமற்றம் செய்ததற்கு தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று (செப்.18), தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிராபகர் முறையிட்டார். தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் மீது குடியரசு தலைவர் இதுவரை முடிவெடுக்காத நிலையில் கொலீஜியம் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது, நீதிபதிகள், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் உயர் நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர்.அதற்கு, தஹில் ரமானியை இடமாற்றம் செய்து கொலீஜியத்தில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தது நிர்வாக உத்தரவு என்பதால் உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என வழக்கறிஞர் பிரபாகர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, மனு பட்டியலிட்ட பின் வழக்கு விசாரணைக்கு உகந்ததா எனபது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Thoothukudi Business Directory