» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாவட்டத்தை பிரிப்பது குறித்த பொதுநல வழக்கு : நீதிமன்றம் முக்கிய உத்தரவு

புதன் 18, செப்டம்பர் 2019 12:24:45 PM (IST)

நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்து கடந்த ஜூலை 18ம் தேதி சட்டப்பேரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்னுதுறை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார்.அதில் நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் மக்களிடம் எந்த வித கருத்துக்களும் முறையாக கேட்கப்படவில்லை எனவும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுமக்களின் கருத்தை கேட்டு அதற்கேற்றாற்போல் மாவட்டத்தை பிரிப்பது குறித்து முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவிட மனுதாரர் வேண்டுகோள் விடுத்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகஸ்ட் 17ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டதாகவும், அன்றைய தினமே குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் 1200 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

உரிய முறையிலேயே நெல்லை மாவட்டத்தைப் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்து மற்றும் மனுக்களை பரிசீலித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory