» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் நினைத்திருந்தால் எப்போதோஆளுநர் ஆகியிருப்பேன்- ராமதாஸ் பேச்சு

புதன் 18, செப்டம்பர் 2019 11:07:04 AM (IST)

"எனக்கு எந்த பதவி ஆசை கிடையாது, நான் நினைத்திருந்தால் எப்போதோ ஆளுநர் ஆகி இருப்பேன்" என்று  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவுக்கு பா.ம.க. மற்றும் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் குருவின் சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மணிமண்டபத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து பேசியதாவது: கடந்த 13.12.18 அன்று காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினேன். தற்போது ரூ.2½ கோடி செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குருவை நான் மூத்த பிள்ளையாகத்தான் பார்க்கிறேன். 

குரு இறந்தது எனக்கு கொடுத்த முதல் தண்டனை. மணிமண்டப திறப்பு விழாவில் நான் கலந்துகொண்டமை இரண்டாவது தண்டனையாகத் தான் பார்க்கிறேன். முந்தைய தி.மு.க. ஆட்சியில் குருவை கொல்ல சதி செய்தனர். இதனை நான் தடுத்துவிட்டேன். அவர்களின் சூழ்ச்சிகளில் இளைஞர்கள் விழாமல் இருக்க வேண்டும். பா.ம.க.வை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்தன. அதற்கு நம் சமுதாயத்தினர் விலை போய்விட்டனர். அன்புமணிக்கு பெருகும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி பொய்யான விமர்சனங்களை செய்கிறார்கள்.

எனக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது. நான் நினைத்து இருந்தால் எப்போதே ஆளுநர் ஆகி இருப்பேன். எனக்கு பதவி ஆசை இல்லை. அதனால் யாரைப் பற்றியும் பேச எனக்கு அச்சமில்லை. நாம் ஆளக்கூடாது என சில கங்காணிகள் சதித்திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள். சதி காரர்கள் வலையில் இளைஞர்கள் விழாமல் அன்புமணி பின்னால் அணி திரளுங்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விளம்பர பேனர் கலாச்சாரம் கிடையாது. ஆனால் தமிழகத்தில் தான் விளம்பர பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆகவே பா.ம.க.வினர் பேனர்கள், தட்டிகள் வைக்கக்கூடாது. சுவர் விளம்பரமும் செய்யக் கூடாது. நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory