» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழை வைத்து அரசியல் செய்பவர்களை விமர்சித்தேன் : பாென்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 6:47:50 PM (IST)

ஒட்டுமொத்த தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என தாம் கூறவில்லை என்றும் தமிழை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களை மட்டுமே குறிப்பிட்டதாகவும் முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானபொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்து நாகர்கோவிலில் இன்று பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என நான் கூறியது, 8 கோடி தமிழர்களை அல்ல. தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றவர்களை பற்றி தான் கூறினேன்.அவர்கள் தமிழை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதை வைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள்.

தமிழை வளர்ப்பவர்களை அரவணைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. நான் கூறிய கருத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான கருத்து அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது அரசியலை வைத்து வியாபாரம் செய்பவர்கள் பற்றி நான் கூறிய கருத்தாகும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory