» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பரூக் அப்துல்லாவை வீட்டுக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் : மு.க. ஸ்டாலின் கண்டனம்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 4:55:51 PM (IST)

பரூக் அப்துல்லாவை வீட்டுக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதல்-அமைச்சர்  பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள அவரது வீடு சிறையாக மாற்றப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரை சிறைக்குள் வைத்திருக்கும் செயல் அதிகப்படியான, தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமானது, கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes





Thoothukudi Business Directory