» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த போலீஸ் : வைரலாகும் வீடியோ

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:27:09 PM (IST)

ஹெல்மெட் அணியாமல் சைக்கிளில் வந்த சிறுவனைப்பிடித்து அபராதம் விதிக்கும் காவல்துறையின்  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வீட்டிலிருந்து வெளியே வரும் பாேதே ஹெல்மட் அணிந்து வெளியே வரும் நிலை உள்ளது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் ஏரியூர் உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர், சைக்கிளில் வந்த சிறுவனைப்பிடித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக அபராதம் விதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் அனைவரும் அதிகளவில் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Sep 17, 2019 - 04:40:15 PM | Posted IP 173.2*****

செய்தி வெளியிடும் முன் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடவும். அந்த சிறுவன் இரண்டு கையையும் விட்டு விட்டு சைக்கிளை ஓட்டி வந்ததால் அந்த SI சைக்கிளை பிடித்து வைத்து, அறிவுரை சொல்லி பத்து நிமிடம் கழித்து அனுப்பி இருக்கிறார். இன்றுதான் அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer EducationThoothukudi Business Directory