» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நக்கீரன் கோபாலை விடுவிக்க கோரி போராட்டம்: வைகோ மீதான அக்.10 க்கு ஒத்திவைப்பு

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 11:34:18 AM (IST)

நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் கோபாலை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு, அக்.10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் செய்தி வெளியிட்டது தொடா்பாக ஆளுநா் மாளிகை சார்பில் நக்கீரன் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு அக்டோபா் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரி சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து, வைகோ காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் செய்து காவலா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, வைகோவை அப்புறறப்படுத்த முயன்ற காவலா்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என இந்திய தண்டனைச் சட்டம் 190, 353, 290 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு எழும்பூா் 14-ஆவது நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூா் நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள சிறப்பு நீதிமன்ற அமா்வுக்கு இந்த வழக்கை மாற்றியதுடன், வருகிற அக்டோபா் மாதம் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications



Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory