» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சங்கரன்கோவிலில் வேலை நிறுத்தம், கடையடைப்பு : தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 10:53:58 AM (IST)

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிந்து தென்காசியை தனி மாவட்டமாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து அங்கு புதிய மாவட்டமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசியை பிரித்தது போல் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

இதில் சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, வி.கே.புதூர் 4 தாலுகா தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கு கடைகள், காய்கறி சந்தை, 5 ஆயிரம் விசைத்தறி மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த கடையடைப்பில் வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகை கடை, அனைத்து வியாபாரிகள் சங்கம் பங்கேற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education



Nalam Pasumaiyagam


Black Forest Cakes




Thoothukudi Business Directory