» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்கம்பியை மிதித்த சிறுவன் உயிரிழந்த விவகாரம் : மாநகராட்சி பொறியாளர் மீது வழக்கு பதிவு

திங்கள் 16, செப்டம்பர் 2019 5:36:47 PM (IST)

முகலிவாக்கத்தில் மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த சம்பவத்தில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், உதவி மண்டல பொறியாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தில் தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், தற்காலிகமாக மணல் நிரப்பி மூடப்பட்டுள்ளது. மழை பெய்ததால், அதில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி நீட்டி கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த தீனா என்ற சிறுவன் மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிறுவனின் உடலை சாலையில் வைத்து, மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

வேளச்சேரி தம்பதி, கொடுங்கையூர் சிறுமிகளை போன்று தற்போது மின் கம்பிக்கு முகலிவாக்கம் தீனாவின் உயிரும் பலியாகி உள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டும் பொதுமக்கள், மின் விபத்துகளை தடுக்க, பூமிக்கடியில் புதை வட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் நிலவரம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில், சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ இறந்த அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் முகலிவாக்கத்தில் அரங்கேறியுள்ளது. 

மகனை இழந்த சோகத்தில் மூழ்கிய தீனாவின் பெற்றோர், மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சாலையோரத்தில் பள்ளம் தோண்டி மூடாமல் அலட்சியத்துடன், கவனக்குறைவாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீனாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, மின்சாரம் பாய்ந்து சிறுவன் இறந்த போது, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory