» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீர் அடித்து நீர் விலகாது; திமுகவின் நிரந்தர போர்வாள் வைகோ : மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கள் 16, செப்டம்பர் 2019 12:40:23 PM (IST)

நான் எப்படி திமுகவின் நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். 

பேரறிஞர் அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக சார்பில் சென்னையில் நேற்று மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதிமுக - திமுக இடையேயான உறவு நெருக்கமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மாநாடு எனது மனதுக்கு நெருக்கமானது. ஏனெனில், நானும் வைகோவும் பல பொது மேடைகளில் கலந்து கொண்டிருந்தாலும், மதிமுக கட்சி மாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல் முறை. எங்கள் உறவு இப்படித்தான். இது பலருக்கு ஆச்சரியமாகவும்,

றாமையாகவும் இருக்கலாம். இதுதான் கருணாநிதி, அண்ணா ஆகியோரின் கனவு. திமுகவிற்கு பக்க பலமாக வைகோ இருந்து வருகிறார்.திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்: ரயில்வே துறையாக இருந்தாலும் சரி, தபால் துறையாக இருந்தாலும் சரி தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒருபுறம் கலாசார தாக்குதலும் மறுபுறம் ரசாயன தாக்குதலும் நடத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் நாசம் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு மோசமடைந்துள்ளது. 

கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். இப்போது நீட் நுழைவு தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுகளை மத்திய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் போராடி போராடித்தான் நமது உரிமையைப் பெற வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. 1949-ஆம் ஆண்டிலிருந்தே ஹிந்தியை நாங்கள் எதிர்த்து வருகிறோம். அவர்கள் திணித்துக் கொண்டே இருப்பார்கள், நாம் எதிர்த்துக் கொண்டே இருப்போம்.

போர்வாள் வைகோ:  திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி இருந்தபோது, கோபாலபுரம் வந்த வைகோ, திமுக-வுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி பக்க பலமாக இருந்து வருகிறார். திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்றும் ஸ்டாலின் பேசினார். அப்போது மேடையில் இருந்த வைகோ உணர்வுப்பூர்வமாக கண்கலங்கினார். 


மக்கள் கருத்து

இவன்Sep 16, 2019 - 05:55:52 PM | Posted IP 162.1*****

நாறவாயும் வேற வாயும் ஒன்று சேர்ந்து விட்டது .. தெலுங்கு இனம் இனத்தோடு சேரும் . இவரை நம்பும் மக்கள் எல்லாம் முட்டாள்கள் ...

தமிழ்ச்செல்வன்Sep 16, 2019 - 02:06:35 PM | Posted IP 162.1*****

நீர் அடித்து நீர் விலகாது, ஆனால் தீக்குளித்து ஒன்பது உயிர் போகும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
CSC Computer Education

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory