» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டமன்ற தேர்தலில் ரஜினி திருப்புமுனையை ஏற்படுத்துவார் : அர்ஜுன்சம்பத் பேட்டி

திங்கள் 16, செப்டம்பர் 2019 10:37:42 AM (IST)

தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் உருவச்சிலை மற்றும் ஏக்நாத் ரானடேவின் நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்திய பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது: தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளை மீட்கும் முயற்சியில் பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலைகளை மீட்கும் இக்குழுவுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன்  என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இவற்றை திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. ரஜினிகாந்த் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற தகவல் தவறானது. அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார்.  நடைபெறவிருக்கும் 2021 பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்றார் .
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam PasumaiyagamAnbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory