» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர், மு.க.ஸ்டாலின் மரியாதை

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:41:47 PM (IST)



அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் மரியாதை

அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மு.க. ஸ்டாலின் மரியாதை



பேரறிஞர் அண்ணா, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை முழங்கியவர். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை போதித்தவர். அவரது 111-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு சென்றார். அப்போது அவருக்கு திமுக சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அண்ணாவின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory