» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது : அமைச்சர் விளக்கம்

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:46:35 AM (IST)

:5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின நிகழ்ச்சிக்கு பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாணவர்களின் நலனுக்காக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுத் தேர்வால், மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படாது. பொதுத் தேர்வின் மூலம் ஆசிரியர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்படும். அரசின் இந்த நடவடிக்கைக்கு வேறு ஒரு இடத்தில் இருந்துதான் எதிர்ப்பு வருகிறது. பத்தாம் வகுப்பு மொழித் தாள் தேர்வு, ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,‘‘ இந்தி மொழி தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். தமிழகத்தில் எப்போதுமே இரு மொழி கொள்கை நீடிக்கும்.  காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்டது. ஆனால், நேற்றும், இன்றும் நாளையும் எப்போதுமே இருமொழி கொள்கைதான் இங்கு நீடிக்கும். இந்தியை தமிழகம் எப்போதுமே ஏற்றுக் கொள்ளாது’’என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory