» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்பத்திற்கு ஒரு தொழில் முனைவோர் கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர் : அமைச்சர் சம்பத் பேச்சு

சனி 14, செப்டம்பர் 2019 6:47:33 PM (IST)மக்கள் வளம்பெற - நாடு முன்னேற, குடும்பத்திற்கு ஒரு தொழில் முனைவோர் கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர் என்ற இலட்சியத்தை அனைவரும் தங்களது வாழ்வில், கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் சம்பத்  நாகர்கோவில், சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வேண்டுகோள் விடுத்தா்.

மக்கள் வளம்பெற - நாடு முன்னேற, குடும்பத்திற்கு ஒரு தொழில்முனைவோர் கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர் உருவாக்குவோம்  என்பதற்கான மாபெரும் இலவச மற்றும் பயிற்சி முகாம் நாகர்கோவில், சுங்கான்கடை, புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில்,  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில்,  இன்று (14.09.2019) நடைபெற்றது.விழாவில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் சம்பத் ,தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர்  நடைபெற்ற இலவச கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் சம்பத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பேசியதாவது:-குமரி மாவட்டத்திலுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும், இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்களும் தாங்கள் படித்த கல்விக்கு ஏற்ற, தொழில்களை தேர்வு செய்து, சுய தொழில் செய்ய முன்வர வேண்டும். தாங்கள் மேற்கொள்ள விரும்பும் தொழில்  குறித்த, விளக்கங்களையும், வழிமுறைகளையும், முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றை திறம்பட செயல்படுத்த மாவட்ட தொழில் மையம்; அலுலகத்தில் கேட்டறியலாம். நீங்கள், புதிய தொழில் துவங்கி, தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். 

இங்குள்ள மாணவர்கள் படிக்கும் போதே, தங்களுடைய எதிர்காலத்தை திட்டமிட்டு, ஆடிட்டர் படிப்பை தேர்வு செய்தால் எதிர்காலத்தில், மிகப்பெரிய ஆடிட்டராகவும், வருமானம் ஈட்டும் தொழிலாகவும் அமைத்து கொள்ளலாம். அவ்வாறு ஆடிட்டர் தொழிலை தேர்வு செய்யும் போது, குடும்பத்திற்கு ஒரு தொழில்முனைவோர், கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர் உருவாகுவதோடு, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்தை நீங்களே திட்டமிட்டு, உங்களுக்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்து, சிறந்த தொழில் முனைவோர்களாக முன்னேற என்னுடைய மனமாற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில், அருட்தந்தை மரியவில்லியம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், மாவட்ட ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண் தங்கம், தூத்துக்குடி ஆவின் பெருந்தலைவர் சின்னத்துரை, தமிழ்நாடு மாநில மீனவ கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் சேவியர் மனோகரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன் எக்ஸ்.எம்.எல்.ஏ, ஆரல்வாய்மொழி  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes
Thoothukudi Business Directory